புதன், 3 அக்டோபர், 2018

​புதுச்சேரி ஆளுநர் - அதிமுக எம்எல்ஏ இடையே மோதல்! October 2, 2018

புதுச்சேரி நிகழ்ச்சியில் மேடையிலேயே துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் புதுச்சேரியை திறந்தவெளி கழிப்பிடமற்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர்கள் நமச்சிவாயம்,கமலக்கண்ணன், எம்பி ராதாகிருஷ்ணன் உப்பளம் தொகுதி உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அன்பழகன் பொதுக்கழிப்பிட வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று தொகுதிக்கு தேவையானவற்றை வலியுறுத்தி பேசினார். இதையடுத்து உரையை முடித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து அன்பழகன் தொடர்ந்து பேசியதால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிருப்தி அடைந்து மைக்கை அணைக்க கூறியதையடுத்து மைக் நிறுத்தப்பட்டது. 

இதனையடுத்து மேடையிலேயே அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனும் துணைநிலை ஆளுநரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Image

Related Posts: