மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 52 நாட்கள் சிறை வாசத்துக்கு பின்னர், வேலூர் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து ஐ.நா. சபையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து சிறையில் அடிப்படை வசதிகள் எதுவும் கொடுக்கப்படாமல் காவல் துறையினரால் பலவித கொடுமைகளுக்கு உள்ளாக்கப் பட்டிருந்தார். இதனால் இவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து சிறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு ஓரளவு உடல் நிலம் தேறியது.
ஆனால் இன்னும் முழுவதுமாக சரியாகவில்லை. அதற்கான மருத்துவ சிகிச்சைக்கும் காவல்துறை முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்நிலையில் 52 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு திருமுருகன் காந்தி இன்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து மே 17 இயக்க உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து சிறையிலிருந்து வெளிவந்த திருமுருகன் காந்தி நேராக சென்று பெரியார் சிலைக்கும், அம்பேத்கார் சிலைக்கும், மேளதாளத்துடனும் கரகோஷத்துடனும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.