காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி, திருவாரூரில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த திமுக கூட்டணி கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்த்து தெரிவித்துள்ள நிலையில், திருவாரூரில் பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர், தஞ்சை, நாகை ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த திமுகவினர் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டு, காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என, அப்போது முழக்கங்கள் எழுப்பட்டன.