
இந்து மதம் குறித்து கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் பேசிய வீடியோ காட்சிகள் பரவியதால், கோவை மாவட்டத்தில் மூன்று காவல் நிலையங்களில் அவர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ். அவர், கோயில்கள் மற்றும் இந்து மதம் குறித்து அவதூறாக பேசும் வகையிலான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக பிரமுகர் முருகேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி மற்றும் சூலூர் காவல் நிலையங்களில் இரு பிரிவுகளின் கீழ் மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பொள்ளாச்சியில் வி.எச்.பி பிரமுகர் மனோ சங்கர் என்பவர் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்துள்ளது.