சனி, 8 டிசம்பர், 2018

தென்னிந்தியாவில் அதிக காற்று மாசுபாடு உள்ள மாநிலம் எது தெரியுமா? December 08, 2018

Image

தென்னிந்தியாவில் அதிக காற்று மாசு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக The Lancet என்ற ஆங்கில பத்திரிகை நடத்திய ஆய்வில், தென்னிந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் காற்று மாசு கொண்ட மாநிலமாக கர்நாடகா விளங்கிவருவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்நாடகாவில் நிலவிவரும் மோசமான காற்று மாசு காரணமாக சராசரியாக 1 லட்சம் பேரில் 95 பேர் நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. பொருளாதாரம் மற்றும் கல்வி ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ள கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் திட எரிபொருட்களின் பயன்பாட்டால் அதிக காற்று மாசு உண்டாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காற்று மாசு குறைக்கப்பட்டால் மனிதர்களின் ஆயுள் சராசரி ஒரு ஆண்டு 4 மாதங்கள் அதிகரிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக அதிக பாதிப்புகள் உண்டாகும் தென்னிந்திய மாநிலங்களில் முதலிடத்தில் தெலங்கானாவும், அதனைத்தொடர்ந்து ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

source: NS7.tv