சனி, 8 டிசம்பர், 2018

மத்திய அரசு புயல் நிவாரண நிதி வழங்காதது குறித்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பும் - கனிமொழி December 08, 2018


Image

டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி,  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கஜா புயல் நிவாரணம் தொடர்பான விவகாரத்தை திமுக எழுப்பும் என்று கூறியுள்ளார்.

போதுமான தொகை ஒதுக்கப்படவில்லை என்பதை திமுக நிச்சயம் பதிவுசெய்யும் என கூறிய அவர், 7 பேர் விடுதலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.


இதையடுத்து, அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தினால் 7 பேர் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்றால் அதற்கு திமுக நிச்சயம் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 10-ம் தேதி டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். அப்போது சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை அவர் அனைத்து தலைவர்களிடமும் வழங்குவார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணி நிச்சயம் அமையும் அதனால் அதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார்.

source: ns7.tv

Related Posts: