அரசியல் சாசனம் மதசார்பின்மையை காக்க கரம் கோர்ப்போம் என இடதுசாரிகள் கண்டன ஆர்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசும் போது இந்தியாவில் மத்திய அரசு அம்பேத்கர் அரசியல் சாசன அமர்வு நடைமுறையில், மனு தர்மத்தை தான் அரசியல் சாசனமாக கொண்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில் பாஜக ஆட்சியில் தான் பாபர் மசூதி இடித்தார்கள், அதே பாஜக முதல்வர் அதே இடத்தில் யோகி ஆதித்யநாத் ராமர் கோவில் கட்டப்போவதாக சொல்கிறார். அப்படி இருக்க இவர்கள் எப்படி அரசியல் சாசனத்தை காப்பாற்றுவார்கள்.
எங்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கருத்து வேறுபாடு உண்டு, கேராளவில் சபரிமலை கோவிலை வைத்து பாஜக மட்டுமா எதிர்க்கிறது, ராகுல் காந்தி வகைறாவும் தான் போராடுகிறார்கள். எங்கள் கருத்து வேறுபாட்டை வைத்து கொண்டு மோடி ஜெயித்துவிடாலாம் என நினைக்கிறார். ஆனால் மதசார்பற்ற நிலை என்ற ஒற்றை நோக்கில் நாங்க ஒன்றாக செயல்படுகிறோம்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கின்றனர். பாலகிருஷ்ணன் பேட்டி, மத்திய அரசு நடைபெறயிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அயோத்தியில் மாத கலவரத்தை உருவாக்கி வருகிறார். அங்கு நீங்களே கோவிலை கட்டுகிறோம் என்று வாதாடுகிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலுக்குள் மாத கலவரத்தை உருவாக்க நினைக்கிறது மத்திய அரசு தலித் மக்கள் மீது இழைக்கப்படும் அநீதி குறித்து தொடர்ந்து இடதுசாரி அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் சமீப காலத்தில் குறிப்பாக ஓசூரில் நடைபெற்ற ஆணவ படுகொலைக்கு தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து கட்சிகளும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் தலித் அமைப்புகள் இடதுசாரி அமைப்புகள் மற்றும் போராட்டம் நடத்தி இருந்த சூழலில் இப்போது அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ரஞ்சித் கூறியிருக்கிற கருத்து முழுமையான விவரம் எனக்கு தெரியவில்லை ஆனால் எங்களை பொறுத்தவரையில் தனித்தொகுதி தலித் சமூகத்தினருக்கு தனி தொகுதி அறிவித்திருக்கிறார்கள்.
அங்கு எந்த கட்சியில் வேண்டுமானாலும், நின்று வெற்றி பெறுவதுதான் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது அதைப் யாராலும் புறக்கணிக்க முடியாது. மதசார்பற்ற கட்சிகள் பல கூறுகளாக பிரிந்து இருந்தால் மட்டுமே பிஜேபி வெற்றி பெற்றது இல்லை என்றால் பிஜேபி தமிழகத்தில் ஜெயிக்க வாய்ப்பே கிடையாது.
அது எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் வருகின்ற தேர்தலில் மதசார்பற்ற அனைத்து கட்சிகளும் பிஜேபி எதிர்ப்பு ஓட்டுகள் கேட்டு வருகிறோம். அதனடிப்படையில் நான் டெபாசிட் கிடைக்காது என்று கூறினேன்.
அதிமுக கட்சி எந்த நிலையில் இருக்கிறது என்று நமக்கே தெரியும் அதிமுக என்கிற கட்சி ஆட்சியில் இருப்பதால் மட்டும் தான் இருக்கிறது ஆட்சி போய்விட்டால் அதிமுக என்று ஒன்று இருக்குமா என்று தெரியாது.
அதிமுகவோடு சேர்ந்தால் பிஜேபிக்கு பலம் வராது பிஜேபியோடு சேர்ந்தால்
அதிமுகவிற்கு பலம் வராது என தெரிவித்தார். தலித் மக்களுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் அவர்களுக்கு அனைத்து வகையான வேலைவாய்ப்புகளும் இருக்கவேண்டும் முதல் 18 பிளஸ் 1 என்று இருந்தது இப்போது 20% ஆக உயர்த்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.
காவேரி நதிநீர் பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்புக்கு பிறகு உச்சநீதிமன்றமும் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசின் தயவை பயன்படுத்தி கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை எடுத்து வருகிறது. பிடிவாதமாக கூட சொல்கிறார்கள் ஆனால் அது ஒருபோதும் நடக்காது.
அரசியலமைப்பு சட்டம் என்று ஒன்று இருக்கிறது அதற்கு உட்பட்டு தான் அனைவரும் இருக்க வேண்டும் அதனை மீறி எவரும் செயல்பட முடியாது என கூறினார்.