வியாழன், 17 அக்டோபர், 2019

3ஜி சேவையிலிருந்து 4ஜிக்கு மாறும் BSNL..!

தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் விரைவில் 4ஜி சேவையில் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிவேக தகவல்தொடர்புக்கான தரநிலையான Voice over Long-Term Evolution (VoLTE) தொழில்நுட்பத்தை பிஎஸ்என்எல் தங்களது தொலைத்தொடர்பு சேவையில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது VoLTE தொழில்நுட்பத்தினை Xiaomi, Vivo, Nokia, Sony போன்ற 30 வகையான ஸ்மார்ட்ஃபோன் மொபைல்களில் சோதித்து வருகிறது Bsnl. இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக டேட்டாவை பயன்படுத்தி வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை பயனாளர்கள் மேற்கொள்ள முடியும்.  
தற்போது பயன்பாட்டில் உள்ள 3ஜி சேவைக்கு பதிலாக 4ஜி சேவை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் Bsnl வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்த 4ஜி சிம்மை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றும் இந்த 4ஜி சிம்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் Bsnl தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஏற்கெனவே VoLTE தொழில்நுட்பத்தை செயல்பாட்டில் கொண்டுள்ள ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் போன்ற நிறுவனங்களுக்கு Bsnl போட்டியை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்களுக்கே சிம்மசொப்பனமாக விளங்கும் ஜியோவிற்கு Bsnl எந்த வகையில் போட்டியை ஏற்படுத்தும் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜியோவிற்கு போட்டியளிக்கும் விதத்தில் Bsnl-ன் 4ஜி கட்டணங்கள் அமையுமா என்பதும் எதிர்பார்ப்பை தற்போது தூண்டியுள்ளது.

credit ns7.tv