செவ்வாய், 22 அக்டோபர், 2019

சுற்றுலா பயணிகளுக்கு திறக்கப்படும் சியாச்சின் பனிமலைப்பகுதி!

credit ns7.tv
Image
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலையில் மீதுள்ள சியாச்சின் பனிமலை சிகரம் உலகின் உயரமான போர்க்களம் என்ற பெருமை பெற்று விளங்குகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட கார்கில் போருக்கு சியாச்சின் மலைப் பிரதேசத்தில் உள்ள நிலம் தொடர்பான உரிமை யாருக்கு என்பதே காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே சியாச்சின் பிரதேசம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
லடாக்கின் Shyok ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள Colonel Chewang Rinchen பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் தலைமை ராணுவ தளபதி பிபின் ராவத்துடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கலந்துகொண்டார்.
இதன் பின்னர் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  
சுற்றுலாதுறையில் மிகப்பெரிய ஆற்றலை லடாக் பெற்றிருக்கிறது, நல்ல சாலை வசதிகள் ஏற்படுத்தப்படும் போது பெரிய அளவிலான சுற்றுலா பயணிகளை லடாக் பெறும்.
சுற்றுலாவிற்காக சியாச்சின் பிரதேசம் திறக்கப்படுகிறது. சியாச்சினில் உள்ள அடிவார முகாமில் தொடங்கி குமார் போஸ்ட் பகுதி வரையில் உள்ள ஒட்டுமொத்த பகுதிகளும் சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட அனுமதி கொடுத்துள்ளது