மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானாவில் இன்றுடன் பரப்புரை ஓய்வதால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
288 தொகுதிகளை கொண்டுள்ள மகாராஷ்ட்ர மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி மற்றும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் பாஜக மற்றும் சிவசேனா தலைவர்கள் தீவிர பரப்புரை ஈடுபட்டுள்ளனர்.
இதே போன்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியை கைப்பற்ற வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு கேட்டு வருகின்றனர்.
90 தொகுதிகள் கொண்ட ஹரியானாவில் ஆளும் பாரதிய ஜனதா ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. ஹரியானாவில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளனர்.
இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு 21-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதியும் நடைபெறுகிறது.