திங்கள், 21 அக்டோபர், 2019

கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைந்ததையடுத்து, குழிகள் மற்றும் அகழாய்வு தளங்கள் மூடப்பட்டன.

Image
கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஜுன் மாதம் 13ம் தேதி தொடங்கி, அக்டோபர் 13ம் தேதியுடன் முடிவடைந்தது. இப்பணிகளுக்காக அப்பகுதியை சேர்ந்த முருகேசன், மாரியம்மாள், கருப்பையா, நீதியம்மாள், போதகுரு ஆகியோரது எட்டரை ஏக்கர் பரப்பளவு நிலங்களில் 52 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு பணிகள் நடைபெற்றன. அப்போது, வட்டப்பானை, இரட்டை சுவர், சங்கு வளையல், பாசி, பவளம் உள்ளிட்ட 900க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அகழாய்வு பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டன. மேலும் அகழாய்வு பணிகளுக்காக போடப்பட்டிருந்த டெண்ட்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இன்னும் ஒருசில நாட்களில் அனைத்தும் அகற்றப்பட்டு விடும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். 
கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்கும், அந்நிலம் மாற்று பயன்பாட்டுக்கு மாறாமல் தடுப்பதற்கும், அந்த நிலப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும் என எழுத்தாளரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
credit ns7.tv