பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
கடும் நிதி நெருக்கடிக்குள்ளான அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட் ஆகியவற்றை புதுப்பிப்பதற்கான திட்டத்திற்கும், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
இதற்காக இரு நிறுவனங்களுக்கும் 14ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுத் தொகையை வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதில் புத்துயிர் திட்டத்திற்காக பி.எஸ்.என்.எல்.நிறுவனத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாயும், மீதமுள்ள 4 ஆயிரம் கோடி ரூபாயினை எம்.டி.என்.எல்.க்கும் வழங்கவும் திட்டமிடப்பட்டு
credit ns7.tv