திங்கள், 14 அக்டோபர், 2019

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 6 சதவிகிதமாக குறையும் என உலக வங்கி கணிப்பு..!

credit ns7.tv
Image
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் வங்கதேசம் மற்றும் நேபாளத்தைவிட குறைந்து, 6 சதவீதமாக சரியும் என உலக வங்கி கணித்துள்ளது.
தெற்கு ஆசிய நாடுகளின் பொருளாதார நிலை குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 6 சதவிகிதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. தேவை மற்றும் வாங்கும் சக்தி இடையே சமநிலை வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் 2016ல் 8 புள்ளி 2 சதவீதமாக இருந்த ஜிடிபி கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 புள்ளி 2 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதால், புதிய தொழில்களில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுவதாலும் வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வங்கதேசம் மற்றும் நேபாளத்தை ஒப்பிடும் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதில் நேபாளத்தின் வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாகவும், வங்கதேசத்தில் 7.2 சதவீதம் இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்தியாவில் 80 சதவீதம் வளர்ச்சி குறைவை சந்தித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா சரியான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டால், அடுத்த நிதியாண்டில் ஜிடிபி 6.9 சதவீதமாகவும், அதற்கடுத்த ஆண்டில் 7.2 சதவீதமாக உயரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.