செவ்வாய், 22 அக்டோபர், 2019

குரூப் 2 தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு...!

credit ns7.tv
Image
குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தையும், தேர்வு முறையும் மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது
குரூப் 2 தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இனிவரும் காலங்களில் குரூப் 2 பிரதான தேர்வு இரண்டு தாள்களாக பிரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் தேர்வில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெறுவோர் மட்டுமே இரண்டாம் தாள் தேர்வுக்கு தகுதி பெறுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வில் அலகு 8 மற்றும் 9-ல் இருந்து தமிழக நாகரிகம், மரபுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதிக கேள்விகள் கேட்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி தகுதித்தேர்வு எழுதுவதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பாக மாற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் முதல் தாளில் கேட்கப்படாத பிற பாடங்கள் அனைத்தும் இரண்டாம் தாளில் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.