சனி, 12 அக்டோபர், 2019

சீன அதிபர் வருகையால் சிங்கப்பூராக மாறிய மாமல்லபுரம்: மு.க.ஸ்டாலின்

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையால், மாமல்லபுரம் நகரமே சிங்கப்பூரை விஞ்சும் அளவுக்கு சுத்தப்படுத்தப்பட்டு உள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 60 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சீன அதிபர் - இந்திய பிரதமர் சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்றும் இது, தமிழகத்திற்கு மிகப்பெரிய பெருமையை தேடி தந்துள்ளதாகவும் கூறினார்.