வெள்ளி, 11 அக்டோபர், 2019

உலக குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா!


Image
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் அபாரமாக விளையாடி வரும் இந்திய வீராங்கனைகள் 4 பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். 
உலக குத்துச்சண்டை போட்டியில் இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காலிறுதிக்கு மேரி கோம் உட்பட 5 இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றனர், இதில் 4 பேர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை இந்தியாவிற்கு உறுதி செய்துள்ளனர்.
மேரி கோம் உலக சாதனை: 
6 முறை உலக சாம்பியனான மேரி கோம் (வயது 36) 51கி எடை பிரிவில் முதல் முறையாக களம் கண்டுள்ளார். காலிறுதி போட்டியில் கொலம்பிய வீராங்கனையான இங்கிரிட் வெலன்சியாவை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப்பில் தனது 8வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதுவரை ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து எந்த ஒரு வீரரும் செய்யாத புதிய உலக சாதனையாக இது அமைந்தது.
அரையிறுதியில் ஐரோப்பிய சாம்பியனான துருக்கியின் Busenaz Cakirogluஐ எதிர்கொள்கிறார் மேரி கோம்.
இதுவரை உலக குத்துச்சண்டையில் அதிக பதக்கங்கள் வென்றவர்கள்:
Mary Kom (India): 8 medals
Félix Savon (Cuba): 7 medals
Katie Taylor (Ireland): 6 medals
அசத்திய புது முகங்கள்:
முதல் முறையாக உலக குத்துச்சண்டையில் காலடி பதித்த ஜமுனா போரோ (54 கி), மஞ்சு ராணி (48 கி) ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறி பிரமாதப்படுத்தியுள்ளனர்.
கடந்த முறை நடைபெற்ற உலக குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றிருந்த வட கொரியாவின் Kim Hyang Miஐ 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார் மஞ்சு ராணி. இவர் அரையிறுதியில்  பல்கேரியாவின் Sevda Asenova அல்லது தாய்லாந்தின் Chuthamat Raksat ஆகியோரில் யாராவது ஒருவரை சந்திக்க உள்ளார்.
இதே போல ஜமுனா போரோ, ஜெர்மனியின் Ursula Gottlobஐ 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். இவர் அரையிறுதி மோதலில் தாய்வானின் Huang Hsiao-Wenஐ சந்திக்க உள்ளார்.
கடந்த முறை வெண்கலம் வென்றிருந்த இந்தியாவின் லோவ்லினா போர்கோஹைன் (69கி) காலிறுதியில் போலந்தின் கோஸீவ்ஸ்காவை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்தியாவிற்கு 4வது பதக்கத்தை உறுதி செய்தார்.
81+ கிலோ எடை பிரிவில் களமிறங்கிய கவிதா சாஹல், Belarus-ன் Kavelinaவிடம் வீழ்ந்து ஏமாற்றம் அளித்தார்

credit ns7.tv