ஞாயிறு, 20 அக்டோபர், 2019

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாயப்பு: மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை.....

Image
தமிழகம் மற்றும் தெற்கு கர்நாடகாவில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறிய மத்திய நீர் வள ஆணையம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நீர்வள ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 21 மற்றும் 22-ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதால், காவிரி மற்றும் கிருஷ்ணா நதிகளில் அதிகப்படியான நீர் திறக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தாழ்வான பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மத்திய நீர் வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அனைத்து அணைகளையும் தீவிரமாக கண்காணிக்கவும் தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு மத்திய நீர் வளைய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

credit ns7.tv

Related Posts: