புதன், 16 அக்டோபர், 2019

நாளையுடன் முடிவுக்கு வருகிறது அயோத்தி வழக்கு!

Image
அயோத்தியில் உள்ள நிலம் குறித்த வழக்கு விசாரணை நாளையுடன் நிறைவடைவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தினசரி அடிப்படையில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நடத்தி வருகிறது. 
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதி ரஞ்சன் கோகாய், 39வது நாளாக இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றதாகத் தெரிவித்தார். 40வது நாள் விசாரணை நாளை நடைபெற உள்ள நிலையில், அத்துடன் விசாரணை நிறைவு பெறுவதாகவும் அவர் கூறினார். ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதால், அதற்கு முன்பாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

credit ns7.tv

Related Posts: