செவ்வாய், 15 அக்டோபர், 2019

இந்தியாவை விட்டு வெளியேறும் அமெரிக்காவின் UM Motorcycles நிறுவனம்?

Image
அமெரிக்காவைச் சேர்ந்த UM Motorcycles நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக 2016ல் இந்தியாவில் களமிறங்கிய அமெரிக்காவின் UM Motorcycles நிறுவனம் Renegade Commando, Commando Mojave, Renegade Sport S போன்ற மாடல்களை விற்பனை செய்து வந்தது. இந்தியாவின்  Lohia Auto நிறுவனத்துடன் கூட்டணி முறையில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் இந்த நிறுவனங்களிடையே ஒருங்கிணைந்து செயல்படுவதில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக உத்திரபிரதேசத்தின் காஷிபூரில் உள்ள தொழிற்சாலையில் தற்போது உற்பத்தியை நிறுத்தியுள்ளதுடன், UM Motorcycles India நிறுவனம் டீலர்ஷிப்புகளையும் மூடி வருவதாக தெரியவந்துள்ளது. ஒரு சில டீலர்ஷிப்களில் இருசக்கர வாகனங்கள் சர்வீஸ் செய்வது மட்டுமே நடந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
லோஹியா ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆயுஷ் லோஹியாவும் இதனை உறுதி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே டீலர்கள் சிலர் இந்த நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் ரூ.1 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக டீலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 
ராயல் என்ஃபீல்டுக்கு தற்போது ஜாவா நிறுவனம் மட்டுமே போட்டியாக இருந்து வருகிறது குறிப்பிடத்தகக்து.

credit ns7.tv