மலேசியாவில் இருந்து பாமாயில் எண்ணெயை இறக்குமதி செய்வதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்திய எண்ணெய் வர்த்தக குழு வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370வது பிரிவு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை விமர்சித்து மலேசிய பிரதமர் மஹாதிர் பின் மொகமத் கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மலேசியாவிடம் இருந்து பாமாயில் எண்ணெய் வாங்குவதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மலேசியாவிடம் இருந்து பாமாயில் எண்ணெய் இறக்குமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா உள்ளதால், இது மலேசியாவிற்கு பொருளாதார நெருக்கடியை கொடுக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் குறித்த கருத்தை, தாம் திரும்ப பெற போவதில்லை என மலேசிய பிரதமர் மஹதிர் பின் மொகமத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv