செவ்வாய், 15 அக்டோபர், 2019

ஜம்மு-காஷ்மீரில் 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் போஸ்ட் பெய்டு செல்போன் சேவை...!

Image
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் போஸ்ட் பெய்டு செல்போன் சேவை வழங்கப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் செல்போன் சேவை முடக்கப்பட்டது. தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதால் ஆகஸ்ட் 29ம் தேதி தோடா, ரஜோவ்ரி, பூஞ்ச் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மட்டும், செல்போன் சேவை வழங்கப்பட்டது.
எனினும், காஷ்மீர் பள்ளத்தாக்கு உட்பட எஞ்சிய பகுதிகளில் கடந்த 70 நாட்களாக செல்போன் சேவை முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணி முதல் அனைத்து பகுதிகளுக்கும் போஸ்ட் பெய்டு செல்போன் சேவை வழங்கப்பட்டுள்ளது. எனினும் பிரீபெய்டு செல்போன் சேவை மற்றும் இணையதள சேவைகள் அனைத்தும் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட நிலையிலேயே தொடர்கிறது.
credit ns7.tv