credit ns7.tv
இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்க அந்நாட்டிற்கு 80 ஆயிரம் கோடியை வட்டியில்லாக் கடனாக அள்ளிக்கொடுத்தது காங்கிரஸ் அரசு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும், ராஜ நாராயணனின் ஆதரித்து சீவலப்பேரி பாளையம்செட்டிகுளம், கேடிசி நகர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். பாளையஞ் செட்டிகுளத்தில் பேசிய அவர், தமிழர்களை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்யும் அளவிற்கு இலங்கை அரசுக்கு திமிரைக்கொடுத்தது காங்கிரஸ் செய்த உதவிதான் என குற்றம்சாட்டினர். அந்த காங்கிரசுக்கு உதவியது திமுக என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதியில் பேசும்போது ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான், மீது தேச துரோக வழக்கு பதிய வலியுறுத்தி தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு அமைப்பின் நிறுவனத் தலைவரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ராஜசேகர் இந்த மனுவை அளித்துள்ளார்.