செவ்வாய், 22 அக்டோபர், 2019

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை நாளாக அறிவித்தது தமிழக அரசு !

Image
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை நாளாக அறிவித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தீபாவளி, வரும் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று, பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏதுவாக, தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமையை, விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்து, ஆணை வெளியிட்டுள்ளது. 
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு, வரும் 28ம் தேதி திங்கட்கிழமை, உள்ளூர் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அந்த நாளை ஈடு செய்யும் விதமாக, நவம்பர் 9-ம் தேதியை பணிநாளாக, தமிழக அரசு அறிவித்துள்ளது

credit ns7.tv

Related Posts: