செவ்வாய், 22 அக்டோபர், 2019

இன்று வேலைநிறுத்தம்...!

Image
மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 வங்கிகளாக மாற்றப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் அறிவித்திருந்தார். இதற்கு வங்கி அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வங்கிகள் இணைப்பால் வாடிக்கையாளர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் வங்கிகள் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், இன்று வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 30,000 வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

credit ns7.tv