சனி, 12 அக்டோபர், 2019

தமிழர்களின் கலைப் பொக்கிஷங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

credit : ns7.tv 
Image
காஞ்சிப் பட்டு தறிக்கூடம், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட தமிழர்களின் பெருமையை பறைச்சாற்றும் கலைப் பொக்கிஷங்களை இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இணைந்து பார்வையிட்டனர். 
சென்னை மாமல்லபுரத்தில் இருநாட்டு தலைவர்களும் இரண்டாவது நாளாக சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின் மாமல்லபுரம் நட்சத்திர விடுதி வளாகத்தில் உள்ள கலைப் படைப்புகள் வைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு பிரதமர் மோடியும், சீன அதிபரும், அதிகாரிகளுடன் பேட்டரி கார் மூலம் சென்றனர்.
தமிழர்களின் கலைப்படைப்புகளை பறைச்சாற்றும் வகையில் அமைந்துள்ள அரங்கை பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கண்டு ரசித்தனர். அப்போது கலை அரங்கில் வைக்கப்பட்டிருந்த சிலைகள், குத்துவிளக்குகள் போன்ற தமிழக கைவினைப் பொருட்கள் ஒவ்வொன்றை பற்றியும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு விளக்கினார்.
தொடர்ந்து அந்த அரங்கில் வைக்கப்பட்ட நெய்யப்பட்டு வரும் பட்டுத்தறியை இருவரும் பார்த்தனர். அப்போது அங்கு நெய்யப்பட்ட பட்டுச்சேலைகளின் பெருமைகளை, சீன அதிபரிடம் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். 
அப்போது சீன அதிபரின் உருவம் பதித்த பட்டுத்துணியையும், பிரதமர் மோடியின் உருவம் பதித்த பீங்கான் தட்டையும் இருவரும் கண்டு ரசித்தனர்.