மாமல்லபுரம் பயணம் என்றும் தன் நினைவில் நிற்கும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
கோவளத்தில் நடந்த இருநாட்டு உயர் அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தில் சீன அதிபர் கலந்து கொண்டார். அப்போது அவரை பிரதமர் மோடி, வருக என தமிழில் கூறி வரவேற்றார். சீனாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஊஹான் சந்திப்பை தொடர்ந்து, தற்போது சென்னையில் நடந்துள்ள இந்த சந்திப்பு இந்திய சீன உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
சீனாவுக்கும் தமிழகத்திற்கு இடையே சிறப்பான கலாச்சாரம் மற்றும் வணிக ரீதியலான தொடர்பு இருந்து வருவதாக கூறினார். மேலும் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவும் சீனாவும் மிகப்பெரும் பொருளாதார சக்தி வாய்ந்த நாடுகளாக உள்ளது எனவும் பிரதமர் மோடி அப்போது தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியா வந்த தனக்கும் தன்னுடைய குழுவுக்கும் அளிக்கப்பட்ட உபசரிப்பு சிறப்பாக இருந்ததாக கூறினார். இந்தியர்களின் வரவேற்பு தன் மனதில் நிலைத்து நிற்கும் வகையில் உள்ளதாகவும் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
credit :ns7.tv