வெள்ளி, 18 அக்டோபர், 2019

வரும் 21,22ம் தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில் மழை...!

Image
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் புவியரசன், வெப்பச்சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார். 
➤குறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். வரும் 21, 22ம் தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார். 
➤அக்டோபர் ஒன்றாம் தேதி முதல், இன்று வரை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மழை அளவில், 8 சென்டி மீட்டர் கிடைத்துவிட்டதாகவும் புவியரசன் கூறினார். 
➤காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய கேரள கடற்கரை பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் புவியரசன் அறிவுறுத்தியுள்ளார். 

credit ns7,tv