credit ns7.tv
இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு மத்திய அரசு தான் காரணம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரபாகர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆட்டோமொபைல் துறை உள்ளிட்ட பல துறைகளின் வீழ்ச்சி இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார மந்த நிலையில் இருந்து இந்தியா விரைவில் மீண்டு வரும் என மத்திய அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பொருளாதார நிபுணரும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பிரபாகர், தற்போதைய இந்திய பொருளாதார நிலை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார். பிரதமர் மோடியின் அரசு, புதிய பொருளாதார கொள்கையை வரையறுப்பதில் போதிய ஆர்வம் செலுத்தவில்லை என தெரிவித்தார்.
மேலும், முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரின் பொருளாதார கொள்கையை பாஜக அரசு பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் மந்தநிலையில் உள்ள இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு சீர்செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்