Home »
» மக்கள் நீதி மய்யம் கட்சி எச்சரிக்கை!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறித்து விஷமத்தனமான செய்திகளை பரப்புவதை நிறுத்தாவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில தினங்களாக கமல்ஹாசன் புகைப்படங்களை போட்டோஷாப் செய்து அவரது ட்விட்டர் பதிவு போலவும், சீனப் பிரதமருக்கு கவிதை எழுதியது போலவும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொய்யான தகவல் என மறுப்பு தெரிவித்துள்ள கட்சி நிர்வாகம், எங்கள் கட்சி தலைவரின் பலத்தை பயன்படுத்தி வேண்டுமென்றே சிலர் விஷம பிரச்சாரத்தை செய்வதாகவும், இது போன்ற நாகரிகமற்ற செயல் கண்டிக்கத்தக்கது என கூறப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற விஷமத்தனமான செய்திகளை பரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சி தொடர்பான விஷம பிரச்சாரங்கள் பரவினால் உடனடியாக கட்சி தலைமைக்கு தெரிவிக்குமாறு தொண்டர்களுக்கு கட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது
credit ns7.tv
Related Posts:
கப்று வணக்கம்
++++++++++++
யாமறிந்த பித் அத்திலேஇந்த பித் அத் போல்இழிதாக எங்கும் காணோம்பாமரத் தனமாகபலரையும் கூட்டி வைத்துசாமியைப் போன்றுசாய்ந்து கிடக்கும் கபுற… Read More
மழை நீடிக்கும்
லட்சத் தீவு அருகே நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது… Read More
30 நாடுகளுக்கு மோடி பயணம் செய்தும் ஏற்றுமதி 45% வீழ்ச்சி கண்டது ஏன்?
காங்கிரஸ்
கடந்த 18 மாதங்களில் 30 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்தும், நாட்டின் ஏற்றுமதி 45 சதவிகிதம் சரிவு கண்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சா… Read More
ஷிர்க்' என்றால் என்ன?
1) அல்லாஹ்வை விட்டுவிட்டு இன்னொருவனை இறைவனாக படைத்தவனாக கருதினால் இது 'ஷிர்க்'
2) நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் அல… Read More
Hadis
யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார்'' என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (… Read More