வெள்ளி, 25 அக்டோபர், 2019

பாலியல் துன்புறுத்தல் புகாரை வாபஸ் பெற மறுத்த பெண் கொலை: 16 பேருக்கு மரண தண்டணை!

credit ns7.tv
Image
வங்காளதேசத்தை உலுக்கிய 19 வயது பெண் கொலை வழக்கில் 16 பேருக்கு மரண தண்டணை விதித்து அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது.
வங்காளதேச தலைநகர் டாக்காவில் கடந்த மார்ச் மாதத்தில் நுஸ்ரத் ஜஹான் ரஃபி என்ற 19 வயது மாணவி ஒருவருக்கு அவர் படித்து வந்த பள்ளி தலைமையாசிரியர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். இருப்பினும் இது அவ்வளவு பெரிய குற்றம் இல்லை என்ற வகையில் அந்த காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் மாணவி நுஸ்ரத்துக்கு பதிலளித்திருந்தனர்.
மாணவி நுஸ்ரத்திடம் காவலர் ஒருவர் பேசும் வீடியோ  வெளியுலகிற்கு கசிந்த போது தான் இந்த விவகாரம் பரபரப்பாகத் தொடங்கியிருக்கிறது.
பாலியல் துன்புறுத்தல் புகாரை வாபஸ் வாங்க வலியுறுத்தி மாணவி மிரட்டப்பட்டு வந்துள்ளார். இதனிடையே கடந்த ஏப்ரல் 5ம் தேதியன்று, அவர் படிக்கும் கல்வி நிறுவனத்தின் மேல்தளத்திற்கு மாணவியை கும்பல் ஒன்று இழுத்துச் சென்று கட்டி வைத்து மிரட்டி புகாரை வாபஸ் வாங்குமாறு கூறியுள்ளது. அவர் மறுக்கவே உயிருடன் அவரை மண்ணென்னெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தினர். 5 நாட்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காததால் அம்மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. கொலை வழக்கில் ஈடுபட்ட 16 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, மாணவியுடன் படித்த சக மாணவர்கள் சிலரே அவரை கட்டிவைத்து தீயிட்டு கொளுத்திய கும்பலில் இருந்ததாக கூறியது வேதனையளிப்பதாக இருந்தது.