சனி, 4 நவம்பர், 2017

கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் குறித்த கருத்துக்கு திருமாவளவன் வரவேற்பு! November 4, 2017

Image

இந்து தீவிரவாதம் பற்றி நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பாஜகவை கண்டித்து திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கரூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், அதிமுகவை பாஜகதான் இயக்குகிறது என்பதற்கு பல சான்றுகள் இருப்பதாகக் கூறினார்.

காவல்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா என சந்தேகம் உள்ளதாகவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் அதளபாதாளத்தில் சரிய மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையே காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்து தீவிரவாதம் என நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டதை வரவேற்பதாகவும், பாராட்டுவதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.