திருவாரூர் மாவட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு விவசாய கூலி தொழிலாளர்களின் உடல்களைக் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 5 தினங்களுக்கு மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் அருகே வண்டாம்பாளை கிராமத்தை சேர்ந்த சுப்பரவேல் என்ற விவசாய கூலி தொழிலாளர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வயலில் தேங்கிய
தண்ணீரை வடியவைக்க சென்றுள்ளார்.
ஆனால் நெடுநேரமாகியும் சுப்பரவேல் வரவில்லை. இதனையடுத்து பல இடங்களில் சுப்பரவேலை உறவினர்கள் தேடிய நிலையில் வண்டாம்பாளை அருகே உள்ள வாய்க்காலில் சுப்பரவேல் சடலமாக கிடந்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுப்பரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் சேமங்கலம் பகுதியை சேர்ந்த நீலமேகம் என்பவரும் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார். இதனிடையே இறந்த விவசாய தொழிலாளர்களின் உறவினர்கள், மழை பாதிப்பு காரணமாக இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனால், தமிழக அரசு தங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.