ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

சென்னையில் பொது கட்டடங்களில் 15 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்த காவல்துறை உத்தரவு! September 9, 2018

Image

சென்னையில் பொது கட்டடங்களில் 15 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவதை உறுதி செய்யுமாறு, அனைத்து காவல்நிலையங்களுக்கும், ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

நகர, பெருநகர சட்டவிதி 2012ன்படி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், ஓட்டல்கள்,  வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட பல இடங்களில் இன்னமும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து, அனைத்துக் கட்டடங்களில் சிசிடிவி பொருத்துவதை உறுதி செய்யுமாறு, சென்னை பெருநகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து காவல்நிலையங்களுக்கும், ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 

நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள், தங்கள் எல்லைக்கு  உட்பட்ட கட்டடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவதை கண்காணிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். தவறும் பட்சத்தில் வணிக கட்டடங்களின் உரிமங்கள்  ரத்து செய்ய  நடவடிக்கை எடுக்குமாறும், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்

Related Posts: