ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

தும்பிக்கையில்லாமல் தவிக்கும் குட்டி யானை! September 9, 2018

Image


தென் ஆப்ரிக்காவில் அமைந்திருக்கும் உயிரியல் பூங்காவில் தும்பிக்கை இழந்த நிலையில் யானை ஒன்று உயிர் வாழ்வது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

யானைகளின் எண்ணிகையை வைத்து தான் ஒரு வனத்தின் இயற்கை செறிவை அறிய முடியும் என்பார்கள். யானை இயற்கையின் மிக முக்கியமான ஜீவராசிகளின் ஒன்று. யானைகளை பண்பாட்டின் அடையாளமாகவும் பார்க்கப்பட வேண்டும் என்கிறார்கள் சிலர். உலகம் முழுதும் பல காரணங்களுக்காக யானைகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. உண்மையில் யானைகளின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்து வருகிறது. காடுகளின் பல்லுயிர்த்தன்மையை காப்பதில் யானைகளின் பங்கு மிக முக்கியமானது என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

யானைகள் பார்த்த மாத்திரத்தில் பலரையும் கவரக் கூடியவை. குறிப்பாக குழந்தைகளை யானைகள் பெருமளவில் கவரும். யானைகளின் உடலில் முக்கியமான உறுப்பு தும்பிக்கை. யானைகள் சுவாசிப்பதற்கும், நீர் அருந்தவும், யானைகள் தும்பிக்கையைத் தான் பயன்படுத்தும். யானைகள் உயிர் வாழ்வதற்கு தும்பிக்கை மிக முக்கியமான உறுப்பாக இருக்கிறது. ஆனால் தும்பிக்கை இல்லாமல் ஒரு யானை உயிர்வாழ்ந்து வருகிறது. இன்னும் சரியாகச் சொன்னால் தன்னுடைய தும்பிக்கையை இழந்து விட்டு உயிருக்குப் போராடி வருகிறது அந்த யானை. 

தென் ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கிறது குரூகர் தேசிய பூங்கா. அந்தப் பூங்காவில் இருக்கும் பிறந்து சில மாதங்களே ஆன குட்டி யானை ஒன்று தும்பிக்கை இல்லாமல் இருக்கிறது. அந்த யானை எப்படி தும்பிக்கையை இழந்தது என்பது தெரியவில்லை என்கிறார்கள் அந்த உயிரியல் பூங்காவின் பணியாளர்கள். முதலை கடித்ததில்  அந்த யானையின் தும்பிக்கை பறி போயிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. தன்னுடைய தும்பிக்கையை இழந்திருக்கும் அந்த யானை தண்ணீர் குடிப்பதற்கும் சுவாசிப்பதற்கும் மிகவும் திணறி வருகிறது. யானையை சோதித்த மருத்துவர்கள் அந்த யானை தன்னுடைய வாழ்நாளின் கடைசிக்கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் இறந்து விடும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

அந்த யானை குறித்த புகைபடங்களும் காணொலிகளும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.  யானைகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இது போன்ற விபத்துகளில் இருந்து யானைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார்கள் சூழலியலாளர்கள். 

Related Posts: