
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இமானுவேல் ஜெயந்தி, தேவர் ஜெயந்தி உள்ளிட்டவைகள் வரவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக, 9.9.2018 முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 9.9.2018 முதல் 15.9.2018 வரையிலான நாட்களிலும், 25.10.2018 முதல் 31.10.2018 வரையிலான நாட்களிலும் வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.