
இந்தியா மற்றும் சீனாவிற்கு வழங்கி வந்த மானியத்தை நிறுத்திக்கொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சில நாடுகள் இன்னும் வளர்ச்சி பெறவில்லை என்பதற்காக, நாம் மானியம் வழங்குவது என்பது, முட்டாள்தனமானது என கூறினார்.
மேலும், ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை அமெரிக்காவிடம் இருந்து பெற்று, சீனா அரசு தனது நாட்டை மறுகட்டமைப்பு செய்வதை அனுமதிக்க முடியாது எனவும் டிரம்ப் தெரிவித்தார்