ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளன. அனைத்து ஆட்டோ சங்க கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு சங்க ஓருங்கிணைப்பாளர் பலசுப்ரமணியம், பள்ளிகளுக்கு செல்லும் ஆட்டோக்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடாது என தெரிவித்தார். இதே போன்று, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்புக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்துள்ளது. நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி, நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 75 ஆயிரம் மணல் லாரிகள் இயங்காது என தெரிவித்தார்.

Image

உச்சநீதிமன்றமே தங்களுடையது தான் என்பதால் நிச்சயமாக ராமர் கோயில் கட்டியே தீர்வோம் என உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் முகுத் பிகாரி வெர்மா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் பக்ராய்ச் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அயோத்தியில் ராமர் கோயில் கண்டிப்பாக கட்டப்படும் என கூறினார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முகுத் பிகாரி வெர்மா, உச்சநீதிமன்றம், நீதித்துறை உள்பட இந்த நாடே தங்களுடையது தான் என்றபோது, கோயில் மட்டும் தங்களுக்கு சொந்தமில்லாமல் போகுமா எனக் கூறினார். 

நாட்டின் இறையாண்மையை கேள்விக்கு உள்ளாக்கும் பாஜக அமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்துவருகின்றன.

Related Posts: