
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளன.
அனைத்து ஆட்டோ சங்க கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு சங்க ஓருங்கிணைப்பாளர் பலசுப்ரமணியம், பள்ளிகளுக்கு செல்லும் ஆட்டோக்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடாது என தெரிவித்தார்.
இதே போன்று, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்புக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்துள்ளது. நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி, நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 75 ஆயிரம் மணல் லாரிகள் இயங்காது என தெரிவித்தார்.