
சூரிய ஒளியை எரிபொருளாக மாற்றுவதற்கான முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
நாம் தற்பொழுது பயன்படுத்தும் எரிபொருட்களில் பெரும்பாலானவை புதுப்பிக்கமுடியாதவை (Non - Renewable). அதனால், அவை வெகு விரைவில் தீர்ந்துவிடும். அதற்கு மாற்றாக எதனை எரிபொருளாக மாற்ற முடியும் என விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துவருகின்றனர். அதன் விளைவாக தற்பொழுது சூரிய ஒளியை எரிபொருளாக மாற்ற விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.
தாவரங்களில் ஏற்படும் Photosynthesis செயல்முறையை போன்று தண்ணீரில் இருக்கும் Oxygen மற்றும் Hydrogen- ஐ தனித்தனியாக பிரித்தெடுக்க செயற்கை முறையை உபயோகித்து பார்த்தனர்.
அதாவது மனிதனால் தயாரிக்கப்பட்ட சில பொருட்களில் சூரிய ஒளியை பயன்படுத்தி, அவற்றில் இருந்து Oxygen மற்றும் Hydrogen- ஐ பிரித்தெடுத்தனர். Semi- Artificial Photosynthesis என்று அழைக்கப்படும் இந்த முறையை பயன்படுத்தி சூரிய ஒளியை சேமித்து வைத்துக்கொண்டனர்.
அவ்வாறு சேமித்துவைக்கப்பட்ட சூரிய ஒளியை மிக எளிதாக எரிபொருளாக மாற்ற முடியும் என விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்தனர். மேலும், இந்த முறை வெற்றிகரமாக அமைந்துவிட்டால், அது எரிபொருள் தயாரிப்பில் ஒரு புரட்சியை உருவாக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.