சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தில், நாடு முழுவதும் 20,000 அதிகமானோர் கையால் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், 20,596 பேர் கையால் மலம் அள்ளுவதாக கண்டறியப்பட்டுள்ளது அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 6,126 பேரும், கர்நாடகாவில் ஆயிரத்து 744 பேரும் கையால் மலம் அள்ளுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் யாரும் கையால் மலம் அள்ளவில்லை என அம்மாநில அரசுகள் மறுத்துள்ளன. மேலும், மகாராஷ்டிராவிலும் யாரும் கையால் மலம் அள்ளவில்லை என மாநில அரசு மறுத்தாலும், அம்மாநிலத்தில் 5,269 பேர் இத்தொழில் செய்வதாக தெரிய வந்துள்ளது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நாடு முழுவதும் 18 மாநிலங்களில் 170 மாவட்டங்களில் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. கடந்த 2014 - 2017ம் ஆண்டு கணக்கீட்டின் படி, இந்தியாவில் கையால் மலம் அள்ளும் தொழில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை 13,770 ஆக இருந்தது.