டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் ஒரே நாளில் 600 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
நேற்றைவிட, இன்றைய சென்செக்ஸ் 150 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 35,820.53 புள்ளிகளாக இன்று காலை இருந்தது. ஆனால், காலை 9.30 மணி அளவில் எடுக்க்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 237.20 புள்ளிகள் குறைந்து 35,538.43 ஆக இருக்கிறது. இதுபோன்றே நிஃப்டியிலும் நேற்றைவிட 158.25 புள்ளிகள் குறைந்து தற்பொழுது 10,700 புள்ளிகளாக இருக்கிறது. இது, 1.30 சதவீத வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம், இந்திய ரூபாய் மதிப்பும் வீழ்ச்ச்சியடைந்து ஒரு டாலர் 73.77 ரூபாயாக இருக்கிறது. சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள ஐடி நிறுவனங்களின் பங்குகள் 2 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன எனவும் வாகன நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றின் பங்குகள் 1.50 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.