வியாழன், 4 அக்டோபர், 2018

ஆசிப் பிரியாணி கடையின் உற்பத்திக் கூடத்திற்கு சீல் வைப்பு! October 3, 2018

Image

சுகாதாரமற்ற முறையில் பிரியாணி தயாரித்த, ஆசிப் பிரியாணி கடையின் உற்பத்திக் கூடத்திற்கு, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல்வைத்தனர்.

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ளது, ஆசிப் பிரியாணி கடையின் உணவு உற்பத்திக் கூடம். இங்கிருந்து சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள, 20 கிளைகளுக்கு, நாள்தோறும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி தயார் செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.

சுமார் 50 பேர் பணியாற்றும், ஆசிப் பிரியாணி கடையின் உற்பத்தி கூடத்தில், சுகாதாரமற்ற முறையில் உணவு தயார் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 3 மாதத்திற்கு முன்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கு எடுத்த உணவு மாதிரிகளில், மட்டன் பிரியாணி உண்பதற்கு ஏற்ற வகையில் இல்லை என்பதும், சுகாதாரமற்ற பகுதியில் உணவு உற்பத்தி செய்வதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஆசிப் பிரியாணியின் உணவு உற்பத்திக் கூடத்திற்கு சீல்வைத்தனர். நாளொன்றுக்கு சுமார் இரண்டரை டன் பிரியாணி இங்கிருந்து தயார் செய்து, கடைகளுக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. சென்னையில் பிரபலமாக உள்ள ஆசிப் பிரியாணி கடையின் உற்பத்திக் கூடத்திற்கு, சீல்வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.