வெள்ளி, 5 அக்டோபர், 2018

​ஆண்களை விட பெண்கள் அதிக காலம் உயிர்வாழ காரணம் என்ன? October 5, 2018

Image

ஆண்களை விட பெண்கள் அதிக ஆண்டுகள் உயிர்வாழ்கின்றார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. பெண்கள் எதனால் அதிக ஆண்டுகள் உயிர்வாழ்கிறார்கள் என்பது குறித்து சமீபத்தில் ஆராய்ச்சி செய்த வல்லுநர்கள் அதற்கான காரணங்களை வெளியிட்டுள்ளனர்.

குடிப்பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் சில தவறான பழக்கவழக்கங்களால் தான் பெண்களை விட ஆண்கள் குறைவான காலம் உயிர்வாழ்கின்றனர் என பலர் நினைத்துக்கொண்டிருப்பர். ஆனால், மேற்குறிப்பிட்ட காரணிகள் ஒருபுறம் இருந்தாலும் ஆண்களுக்கு சுரக்கும் ப்ரொஜெஸ்ட்ரோன் என்னும் ஹார்மோனின் செயல்பாடு காரணமாகத்தான் ஆண்கள் பெண்களை விட குறைவான ஆண்டுகள் உயிர்வாழ்கின்றனர் என அந்த ஆராய்ச்சி முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெண்கள், ஆண்களை விட அதிக காலம் உயிர்வாழ்வதற்கு மிக முக்கியமாக இரண்டு காரணங்கள் இருக்கின்றது என தெரிவித்த ஆராய்ச்சியாளர்கள், பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் தான் காரணம் என தெரிவித்துள்ளனர். ஈஸ்ட்ரோஜன், உடலில் இருக்கும் அணுக்கள் இறப்பதை குறைக்கிறது. அதனால், பெண்களால் அதிக காலம் உயிர்வாழ முடிகிறது.

இரண்டாவது காரணமாக DNAவின் நுனியில் இருக்கும் Telomere-ஐ குறிப்பிடுகின்றனர்.  பெண்களுக்கு Telomere மிக நீளமாக இருக்கும். Telomere நீளமாக இருப்பது அதிக நாட்கள் உயிர்வாழ்வதற்கு வழிவகுக்கும். ஆதலால், பெண்கள் ஆண்களை விட அதிக காலம் உயிர்வாழ்கின்றனர்.