ஞாயிறு, 7 அக்டோபர், 2018

கேரளாவில் தொடர்மழை; முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு! October 7, 2018

Image

கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக முல்லை பெரியாறு கடந்த 3 நாட்களில் 7 அடி உயர்ந்து 133 அடியை எட்டியுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழகத்தில் ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதரமாக விளங்கக் கூடிய முல்லை பெரியார் அணைக்கான நீர்வரத்து  வினாடிக்கு மூவாயிரத்து இருபத்தைந்து கன அடி வீதம் அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாளில் 127 அடியிலிருந்து 133 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் மதுரை மாவட்ட முதல் போக பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் வினாடிக்கு ஆயிரத்து 850 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வைகை அணை நீர்மட்டமும் 60.47 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 1159 
கனஅடியாகவும், நீர்கொள்ளளவு 3692 மி.கனஅடியாகவும் வெளியேற்றப்படும் நீரின் அளவு 1190 கனஅடியாகவும் உள்ளது