
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஓடும் அரசு பேருந்துகள், தரமற்ற முறையில் இருப்பதாக வேதனை தெரிவித்த ஓட்டுநரின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பழனியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் விஜயகுமார் என்பவர், பழனியில் உள்ள அரசு பேருந்துகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், பெரும்பாலான பேருந்துகளில் ஷட்டர், பிரேக், என எதுவுமே இல்லாமல் ஓட்டுவதாகவும் வேதனை தெரிவித்தார்.
மழையின் போது, ஓழுகும் மழைநீரில் 4 மணி நேரம் இயக்கி வந்ததாகவும், பணிமனை அதிகாரிகள் பேருந்துகளின் நிலை குறித்து, கவலைப்படுவது இல்லை, எனவும் குறை கூறினார்.