வெள்ளி, 2 நவம்பர், 2018

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் November 2, 2018

Image

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வரும் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா, தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், இதர பகுதிகளில் இன்று பருவமழை தொடங்கியதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என கூறிய அவர், அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என தெரிவித்தார். 

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்..