பாஜகவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க உள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தனர். பாஜகவை தோற்கடிக்கவும், நாட்டின் எதிர்காலம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க தாங்கள் ஒன்றிணைந்துள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார். பிரதமர் மோடி ஆட்சியில், நாட்டில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
பாஜகவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெரிவித்தார். மேலும், தங்களது நீண்டகால கோரிக்கையான, ஆந்திர மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கைக்கு, ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.