தேனி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி ராகுவேந்திர எஸ். ராத்தோர் தலைமையிலான அமர்வில் கடந்த 10ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு மற்றும் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில் நியூட்ரினோ திட்டத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதை மட்டும் தமிழகம் செய்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தனது உத்தரவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில் இதுதொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.