நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார்கள்.
தேசிய அளவிலான அணி மாற்ற நிகழ்வில் இந்த சந்திப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் இடம் பெற்றது. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி சமீபத்தில் பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் சமீபத்தில் வெளியேறியது. இதையடுத்து பாஜக குறித்து கடும் விமர்சனங்களை தெரிவித்து வரும் சந்திரபாபு நாயுடு பாஜகவிற்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை இன்று சந்தித்தார் சந்திரபாபு நாயுடு, டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தெலங்கானா சட்டமன்ற தேர்தலிலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது ராகுல் காந்தி கூறியதாவது; “ஜனநாயகத்தை பாதுகாத்திடவும், நாட்டின் எதிர்காலம் கருதியும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளோம், என கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு நாட்டினை பாதுகாக்கும் வகையில் நாங்கள் ஒன்றுசேர்ந்துள்ளோம், கடந்த காலத்தை நாம் மறக்க வேண்டும், தற்சமயம் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றினைய வேண்டியது ஜனநாயகக் கட்டாயம்” என கூறினார். இந்த சந்திப்பு தேசிய அளவிலான அணி மாற்றங்களில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.