கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான இன்று, கர்நாடக மக்களின் கொண்டாட்டங்களிடையே கர்நாடகாவை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி போராட்டம் நடந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்புராகி பகுதியில் கன்னட ராஜ்யோட்சவா என்கிற அமைப்பினர் இந்த போராட்டத்தை நடத்தினர். வடக்கு கர்நாடகா பகுதியில் உள்ள 6 மாவட்டங்களை தனியாகப் பிரித்து, ஐதராபாத் கர்நாடகா என்கிற தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று, அந்த அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
புதிய மாநிலத்திற்கான கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை, போலீசார் கைது செய்தனர். தனி மாநிலம் கோரி நடைபெற்ற இந்த போராட்டத்தால் கல்புராகியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.